July 24, 2018
தண்டோரா குழு
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 6 மாத பெண் சிங்க குட்டிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஜெயா என்று பெயர் சூட்டினார்.
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.இப்பூங்காவில் பூங்காவில் 10 பெண் சிங்கங்கள் மற்றும் 7 ஆண் சிங்கங்கள் என மொத்தம் 17 சிங்கங்கள் உள்ளன. இவற்றில் நீலா என்ற பெண் சிங்கத்திற்கும்,சிவா என்ற ஆண் சிங்கத்திற்கும் பெண் சிங்க குட்டி ஒன்று பிறந்தது.
இந்நிலையில் பிறந்து 6 மாதம் ஆன சிங்க குட்டிக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக 6 மாத பெண் சிங்கத்திற்கு ஜெயா என பெயர் சூட்டினார்.
மேலும்,வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்த தமிழக முதல்வர் இந்த பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு புதிய இருப்பிடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வண்டலூர் பூங்காவில் காண்டாமிருகங்கள் இல்லாததால் விரைவில் பீகார் மாநிலம் பாட்னாவிலிருக்கும் பூங்காவிலிருந்து காண்டாமிருகம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.