• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒசில் குற்றச்சாட்டுக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மறுப்பு!

July 24, 2018 tamilsamyam.com

ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு ஒரு போதும் துணை நிற்காது என மெசுட் ஒசில் குற்றச்சாட்டை ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு மறுத்துள்ளது.

ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து 2018 தொடரில் லீக் போட்டியுடன் வெளியேறியது.
இந்நிலையில் ஜெர்மனியின் நட்சத்திர வீரரான மெசுட் ஓசில் ஜெர்மனி அணியில் இனவெறி மற்றும் மரியாதை குறைவு காரணமாக உடனடியாக ஓய்வு பெறுவ் தாக திடீரென அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

இதற்கு கடந்த மே மாதம் லண்டனில் துருக்கி அதிபர் எர்டோகனை ஒசில் மற்றும் அவரின் சக வீரரான கண்டோகன் சந்தித்தனர்.அப்போது அர்செனல் அணி ஜெர்சியை எர்டோகனுக்கு பரிசாக அளித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டோவை கடந்த மே 14ல் துருக்கியின் அரசியல் நோக்கத்துக்காக எர்டோகன் கட்சியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தினர்.இந்நிலையில் சமூக வலைதளத்தில் காட்டுத்தீயை விட வேகமாக பரவிய இப்போட்டோவால் ஜெர்மனியில் இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இதற்கு கண்டோகன் இன்ஸ்டாகிராம் மூலம் பதில் அளிக்க,ஒசில் மௌனமாகவே இருந்தார்.அடுத்த நாள் (மே 15) இந்த சர்ச்சைகளை மீறி ஜெர்மனி பயிற்சியாளர் உலகக் கோப்பைக்கான அணியில் ஒசில்,கண்டோகன் பெயரை அறிவித்தார்.ஆனால் லீக் போட்டியில் ஜெர்மனி தோல்வியை சந்திக்க, முன்னாள் வீரர்கள் ஒசிலுக்கு இனி ஜெர்மனிக்காக விளையாடுவது பிடிக்கவில்லை என கிளப்பிவிட்டனர்.

இதற்கு துருக்கிஸ் ஜெர்மனான (ஜெர்மனியில் பிறந்த துருக்கியர்) ஒசில்,துருக்கி அல்லது ஜெர்மனி என இரு சர்வதேச அணிக்காக விளையாட வாய்ப்பு பெற்றவர்.ஆனால்,ஒசில் ஜெர்மனி அணிக்காக விளையாட முடிவு செய்து விளையாடினார்.

இந்நிலையில் ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு ஒரு போதும் துணை நிற்காது என மெசுட் ஒசில் குற்றச்சாட்டை ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு மறுத்து பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளது.தவிர, ஒசில் தனது முடிவை மாற்றிக்கொண்டு,மீண்டும் அணிக்கு திரும்பினால் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க