July 23, 2018
தண்டோரா குழு
நடிகர் ரஞ்சித் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில்பாமகவில் இணைந்தார்.
1993ம் ஆண்டு பொன்விலங்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித்.அதன் பல்வேறு படங்களில் முக்கிய கதாபத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்துள்ளார். எனினும் கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட வாய்ப்புகள் இன்றி இருந்தார்.இதற்கிடையில் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக இரு அணியாக இருந்த போது நடிகர் ரஞ்சித் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வந்தார். அப்போது நானும் அதிமுக உறுப்பினர் தான் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஞ்சித் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உடனிருந்தார். திரைபடங்களுக்கு எதிரான நிலைபாட்டை பாமக கடைபிடித்து வரும் நிலையில் தற்போது அக்கட்சியில் ஒரு நடிகர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.