July 23, 2018 
தண்டோரா குழு
                                கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை புதுப்பிப்பது தொடர்பான சோதனைக்காக லாரியை கொண்டு சென்ற போது திடீரென லாரியின் முன்பகுதி தீப்பிடித்து எறிந்தது. 
கோவையை அடுத்த துடியலூர் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்,லாரியை புதுப்பிப்பது தொடர்பான சோதனைக்காக இன்று ஒரு லாரி வெளியே நின்று கொண்டு இருந்தது . அப்போது திடீரென லாரியின் முன் பகுதியில் தீப்பிடித்தது.லாரியின் ஓட்டுநர் உடனடியாக வண்டியை விட்டு இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பிறகு மளமளவென பரவிய தீயினால் லாரியின் முன்பகுதி முற்றிலும் எரிந்தது.உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.லாரி தீப்பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.லாரி தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.