July 23, 2018
தண்டோரா குழு
ராகுல்காந்தி இன்னும் பிரதமர் ஆவதற்கு தன்னுடைய தனிப்பட்ட திறமையையும்,பொறுமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“தற்போது வருமானத் துறையினர் தனக்கு வருகின்ற தகவல்களின் அடிப்படையிலேயே சோதனை செய்வதாகவும்,வருமான வரித்துறையை இயக்குகின்ற இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இல்லை என கூறினார்.தமிழக அரசு,பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்தும் பேசி உள்ளனர்,எனவே அவர்கள் ஒன்றும் பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை.ஸ்டாலினின் ஒவ்வொரு பேச்சும் பொதுமக்களுக்கு ஏமாற்றம் தரும் வகையிலேயே அமைந்து தற்போது அமைந்து உள்ளது.
கமலஹாசன் ஒரு நடிகராக மட்டுமே மக்களால் அறியப்படுவதாகவும்,அரசியல் தலைவராக அறிய இன்னும் கால ஆவகாசம் ஆகும்.கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தும் நீர்நிலைகள் நிரம்பவில்லை என கூறிய அவர்,மழைத் தண்ணீர் வீணாகி கேரளாவிற்கு செல்வதாகவும்,எனவே தமிழக அரசு நீரை சேமிப்பது குறித்து அக்கறையுடன் செயல்பட வேண்டும்”.எனக் கூறினார்.