• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி பெண் தர்ணா போராட்டம்

July 23, 2018 தண்டோரா குழு

கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவரை காவல் துறை சமாதானப்படுத்தினர்.

கோவை சுந்தராபுரம் கருப்பராயன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தனலட்சுமி. இவரது கணவர் இறந்து நிலையில்,இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வரும், நிலையில் அதே பகுதியில் வசிக்கும் லதா என்பவர் தனலட்சுமியை காரணமே இல்லாமல் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை லதா வீட்டில் வைத்திருந்த 100 ரூபாய் பணத்தை தனலட்சுமி திருடி விட்டதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.மேலும் மாற்றுதிறனாளியான தனலட்சுமியை இன்று காலை உதைத்தும்,செருப்பால் அடித்தும் லதா மானபங்கப்படுத்தியுள்ளதாக கூறி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுக்க வந்தவர் அலுவலக வாயிலில் அமர்ந்து தனக்கு நீதி வேண்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.தனக்கு யாரும் இல்லாத காரணத்தால் பாபு மற்றும் அவரது மனைவி லதா இருவரிடமிருந்தும் தனது உயிருக்கும்,உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார்.

மேலும் படிக்க