July 21, 2018
தண்டோரா குழு
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது.அதன் பின் தொடர்ச்சியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தபட்டு,அக்கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து முடிவு செய்யபட்டு வருகின்றது.
இந்நிலையில்,டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 28 வது கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், ஜி.எஸ்.டி.,யில் இருந்து சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரியை விலக்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட போது நாப்கின்களுக்கு 12% வரி விதிக்கப்பட்டது.இதனால் ஜிஎஸ்டி வரியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.இதையடுத்து தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதைபோல் பிரிட்ஜ்,வாஷிங்மிஷின்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.ரூ.1000 வரை மதிப்புள்ள ஷூக்களுக்கு 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.முன்னர் ரூ.500 வரை மதிப்புள்ள ஷூக்களுக்கு 5 சதவீதம் இருந்தது. இதையடுத்து அடுத்த ஜி.எஸ்.டியின் கூட்டம் வரும் ஆக., மாதம் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.