• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜஸ்தானில் மாடு கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக்கொலை

July 21, 2018 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில்,மாடு கடத்தல்காரர் என்று சந்தேகப்பட்டு ஒருவர் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தான் உச்ச நீதிமன்றம்,மாட்டை காப்பதற்காக சட்டத்தை பொது மக்கள் கையில் எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இனியும் அதைப் போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது.அரசு இது குறித்து கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்.இரும்புக் கரம் கொண்டு தாக்குதல் நடத்துபவர்களை ஒடுக்கிட வேண்டும் என்று கடுமையாக தெரிவித்தது.

இந்நிலையில்,ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கர் கிராமத்தில் நேற்று இரவு இரண்டு பேர் மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர்.இதனைப் பார்த்த பொதுமக்கள் அவர்கள் மாட்டை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகப்பட்டு அவர்கள் மீது சரமாரியாத தாக்குதல் நடத்தியுள்ளனர். ந்தத் தாக்குதலில் அக்பர் கான் என்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,எங்களுக்கு நீதி வேண்டும்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என பலியான நபரின் தந்தை சுலைமான் தெரிவித்துள்ளார்.ஒருபுறம் நாடு முழுவதும் குழந்தை கடத்தல் என்ற வதந்தியால்,உண்மை தெரியாமல் பலர் சந்தேகத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டு வருகின்றனர்.

சட்ட ஒழுங்கை மாநில அரசுதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மத்திய அரசு உதவி செய்யும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்த நிலையில்,மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க