• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச திரைப்பட விருது பட்டியலில் விஜய் பெயர் ரசிகர்கள் உற்சாகம்

July 21, 2018 தண்டோரா குழு

தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாளியன்று வெளியான படம் மெர்சல்.தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது தயாரிப்பு படமான மெர்சல் ரசிகர்களின் ஆதரவை மாபெரும் பெற்றி பெற்றுதிற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தன.

இந்நிலையில் INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018ம் ஆண்டுக்கான ஐஏஆர்ஏ விருது பரிந்துரை பட்டியல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.2014ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றுள்ளார்.

மேலும்,இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம்.அதிக வாக்குகள் பெற்ற நடிகர்களுக்கு விருது வழங்கப்படும் எனத் தெரிகிறது.உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஏஜென்ட் திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா,சில்ட்ரன்ஸ் ஆப் லெஸ்ஸர் காட் நடிகர் ஜோஷுவா ஜாக்சன்,சைட் சிக் கேங் நடிகர் அட்ஜெட்டே அனாங்,எல் ஹெபா எல் அவ்டா நடிகர் ஹசன் மற்றும் தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல் பட நடிகர் கென்னத் ஒக்கோலி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்களின் பெயர் இடம்பெறாமல் இந்தியாவிலிருந்து நடிகர் விஜய் மட்டுமே தேர்வாகியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க