தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் டுட்டி பேட்ரியாட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.
டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் கடந்த 11ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது.இந்த ஆண்டு முதல் முறையாக வெளிமாநில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில்,திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 9வது போட்டியில், டுட்டி பேட்ரியாட்ஸ் அணியும் லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது.இதைத் தொடர்ந்து களமிறங்கிய டுட்டி பேட்ரியாட்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கௌசிக் காந்தி மற்றும் தினேஷ் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவிக்கத் தொடங்கினர். சிறப்பாக விளையாடிய கௌசிக் 43 ரன்களிலும் தினேஷ் 59 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.
அதன்பின் களமிறங்கிய மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்களை இழந்ததால்,20 ஓவர்கள் முடிவில் டுட்டி பேட்ரியாட்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியினர்,ஒருபுறம் அதிரடியாக ஆடினாலும் மற்றொரு புறம் விக்கெட்களை சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.இதனால்,கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 171 ரன்களை குவித்தது.இதனால்,டுட்டி பேட்ரியாட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டுட்டி பேட்ரியாட்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.அதேபோல்,கோவை அணி புள்ளிகள் பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்