July 20, 2018
தண்டோரா குழு
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.தஹில்ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பணியாற்றி வருகிறார். அவருக்கு,உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்குமாறு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வரும் தஹில்ரமணிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.இவர் 2001ம் ஆண்டு முதல் மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.
மேலும்,டில்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படும் கீதா மிட்டலை,காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்,கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போசை, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்,கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஸ் ராயை,கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்,குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஆர் ஷாவை,பாட்னா உயர்நீதிமன்றதிற்கு மாற்றவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.