• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குற்றச் செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவு

July 20, 2018 தண்டோரா குழு

பெண்கள்,குழந்தைகளுக்கு எதிராக குற்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும்,பொதுமக்களுக்கு செல்லும் அரசின் நலத்திட்டங்களில் எவ்வித சுணக்கமுமின்றி துரிதமாக செயல்படுத்துவதில் முனைப்புடன் செயல்படவும் கோவை அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

கோவை சுற்றுலா மாளிகையில் வளர்ச்சி திட்டங்கள்,சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்,செயின் பறிப்பு,சைபர் கிரைம் குற்றங்கள்,தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தல்,திருட்டு சம்பவங்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும்,குற்ற செயல்களை தடுக்கும் வகையிலும்,குற்றவாளிகளை எளிதில் கைது செய்யும் வகையிலும் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்திடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இரவு ரோந்துப்பணிகளை அதிகரிக்க போதுமான காவலர்களை பணியமர்த்திடவும்,போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார்.

மேலும்,பல்வேறு துறைகளின் சார்பில் கோவை மாவட்டத்திற்கு அரசு அறிவித்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து உடனடியாக அந்தந்த துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் தெரிவிக்கவும்,மலையோர கிராமங்களில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை கொண்டு வேட்டைத்தடுப்பு காவலர்களை பணியமர்த்தி விவசாய பயிர்களையும்,வன விலங்குகளையும் பாதுகாத்திடவும்,மனித வனவிலங்கு மோதல்களை தடுக்க இரவு ரோந்து பணியை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சி மூலம் மழை காலங்களில் சுகாதாரமான குளோரின் ஏற்றப்பட்ட குடிநீர் வழங்குவதுடன்,தொற்று நோய்கள் பரவாமல் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக நொச்சி செடிகளை பொதுமக்களுக்கு வழங்கவும்,மருத்துவ முகாம்கள் கிராமங்கள் தோறும் நடத்திடவும் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்,மாநகர காவல்துறை ஆணையர்,ஐ.ஜி.,மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர்,மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க