July 19, 2018
தண்டோரா குழு
விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கு மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்படவுள்ளதாக கால்நடைகள் மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கூடிய விரைவில் 77,000 கிராமப்புற ஏழை,எளிய மற்றும் பெண்களுக்கான நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தை ரூ.50 கோடி மதிப்பில் விரைவில் முதல்வர் துவக்கி வைப்பார் என்றார்.மேலும்,இந்தாண்டு 1.5 லட்சம் பேருக்கு விலையில்லா ஆடுகள் மற்றும் 15 ஆயிரம் பேருக்கு கறவை பசுக்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அடுத்த மாதத்தில் இருந்து இந்த பணிகள் துவங்கப்படும்” என்றார்.