July 19, 2018
தண்டோரா குழு
நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதற்கிடையில்,நீட் தேர்வு தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு.ஏனெனில், தமிழக அரசு பரிந்துரைத்த மொழி பெயர்ப்பாளர்களே இதற்கு காரணம்,இனி அந்தந்த மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்படும்.நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களுக்கு மாணவர்கள் செல்ல தேவை இருக்காது” எனக் கூறினார்.