• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கணவரை துவம்சம் பண்ணிய மனைவி;அறிவுரை வழங்கி அனுப்பி வைத்த காவல்துறை

July 19, 2018 தண்டோரா குழு

கோவையில் மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்து திருமணம் செய்துக்கொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் மக்கள் செல்லும் சாலையில் அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த இவர்கள்,கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.இந்நிலையில் தரிசனத்திற்காக இவர்கள் கோவை சாய்பாபா கோவிலுக்கு வந்துள்ளனர்.அப்போது,கணவர் கையில் மற்றொரு பெண்ணின் பெயர் பச்சைக்குத்தி இருந்ததையும் திருமணமாகி குழந்தை இருந்ததை மறைத்து,திருமணம் செய்துக்கொண்டதை அறிந்து அந்த நபரின் மனைவி, அவரை கோவிலின் நுழைவாயிலில் வைத்தே சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதையடுத்து,தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்,இருவரையும் சமாதானம் செய்து,சந்தேகமிருந்தால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுக அந்த பெண்ணிடம் சொல்லி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

சாய்பாபா கோவிலுக்கு தம்பதியினர் இருவரும் தரிசனத்திற்கு வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அந்த வழியாக வந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் படிக்க