July 18, 2018
தண்டோரா குழு
கோவையில் பயணிகள் பாதுகாப்பு,வருவாய் பாதிப்பு ஏற்படுத்தும் நடத்துனர் இல்லா பேருந்து இயக்கத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் ஓய்வுப்பெற்ற பணியாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
240 நாட்கள் பணி முடித்த அலுவலக பணியாளர்கள்,தொழில்நுட்ப பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவது போல்,ஓட்டுனர்கள்,நடத்துனர்கள் முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தேவையான உதிரி பாகங்கள்,போதுமான தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்,விலைவாசி உயர்விற்கு ஏற்ப அகவிலைப்படி ஓய்வூதியம் இணைத்து,அதற்கு உண்டான நிலுவைத்தொகையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் ஓய்வுப்பெற்ற பணியாளர்கள் கோவை சிவானந்த காலனி பவுர் ஹவுஸ் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் கோவை,ஈரோடு,திருப்பூர் ஆகிய மண்டலங்களின் பொறுப்பாளர்கள்,தொழிலாளர்கள்,ஓய்வூதியதாரர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.