July 17, 2018
தண்டோரா குழு
ஆறுமுகத்தைக் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆறாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை அடுத்த நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாடியில் இருந்த விழுந்து மாணவி லோகேஷ்வரி உயிரிழந்தார். இந்த வழக்கில் போலி பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், ஆறுமுகத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி ஆலந்துறை காவல்துறையினர் கோவை 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகத்தைக் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.