July 17, 2018 
தண்டோரா குழு
                                சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி  பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிகள் சார்பாக யாரும் ஆஜராக மாட்டோம் என்று  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர்  மோகனகிருஷ்னன் அறிவித்துள்ளார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த கொடுமையை மன்னிக்கவே கூடாது. கைது செய்யப்பட்ட 17 பேர்  சார்பாக ஆஜராக மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.மேலும்,17 பேர் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.இலவச சட்ட உதவி மூலம் யார் ஆஜரானாலும்  கடுமையாக எதிர்ப்போம்.பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தேவையான சட்ட உதவிகள்  செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.