July 16, 2018
தண்டோரா குழு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தையும் இணைக்க தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,கோவையை அடுத்த வாலாங்குளம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் அடியில் உள்ள பகுதிகளை 23.83 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பதற்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் கோவையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தையும் இணைக்க தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாக கூறினார்.மேலும்,கோவை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.