July 16, 2018
தண்டோரா குழு
கோவையில் இந்து அறநிலைத்துறையின் தீபம் ஏற்றும் தடை உத்தரவை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபங்கள் விற்பதை இந்து அறநிலநிலையத்துறையானது தடை விதித்தது.இதனை அடுத்து கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள லட்சிமி நரசிம்மர் திருக்கோவிலில் பாஜகவின் கோவை மாவட்ட தலைவர் தலைமையில் இந்து அறநிலைத்துறையின் தீபம் ஏற்றும் தடை உத்தரவை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது.
இக்கையெழுத்து இயக்கத்தில் கோவிலுக்கு வரும் பகத்தர்கள் அனைவரும் கையெழுத்திட்டும், விளக்கேற்றியும் இந்து அறநிலைத்துறைக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.கோவில்களில் விளக்கேற்றும் முறை ஓர் அம்சமாக இருந்து வருகிறது.இக்கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மட்டும் சுமார் 12ஆயிரம் விளக்குகள் விற்பதாகவும் இதன் மூலம் மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அரசுக்கு வருமானத்தை ஈட்டுவதாகவும்,தடைவிதித்ததையடுத்து இதன் மூலம் பல்வேறு கோவில்களிலிருந்து வரும் வருமானம் அரசுக்கு இழப்பீடாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.