July 14, 2018
தண்டோரா குழு
கோவையில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதமே ஆன,மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் பாகங்கள் இடிந்து வீட்டின் மாடியில் விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவையை அடுத்த பேரூர் போஸ்டல் காலனி அருகே எம்.ஆர்.கார்டனில் 2.5 லட்சம் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை ரூ.32.07 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டன.இந்த
மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கூட்டுக்குடிநீர்த் திட்டத்திற்காக கட்டப்பட்டது.
இந்நிலையில் இன்று மீன் வியாபாரியான ஸ்வர்ணபாண்டி என்பவரின் வீட்டில்,தமிழ்நாடு வடிகால் வாரியத்தின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் செல்லும் குழாயின் ஒரு பாகம் உடைந்து வீட்டில் மேல்மாடியில் விழுந்துள்ளது.இதனால் தண்ணீர் வீணாகி வெளியேறியது.
வீட்டிற்குள் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தவர்,மாடியில் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு வெளியே ஓடி வந்தனர்.தரமற்ற வகையில் கட்டிடங்களை கட்டியதினால் தான் இது போன்ற சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.மேலும் இந்த தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யாததால் இந்த தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.