• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் கைது

July 14, 2018 தண்டோரா குழு

குடிநீர் இணைப்பு வசதிகளை செய்யவுள்ள தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி குடிநீர் குழாய்க்கு அஞ்சலி செலுத்திய மாதர் சங்கத்தினர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகரத்திற்கான குடிநீர் விநியோகத்தை 26 ஆண்டுகளுக்கு சூயஸ் என்கிற பன்னாட்டு நிறுவனம் கோவை மாநகராட்சியிடம் ஒப்பந்தத்தை போட்டுள்ளது.இதன்காரணமாக பொது குழாய்கள் அகற்றப்படும்,குடிநீர் வணிகமயமக்கப்படும் என்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாய்க்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தும்,தேங்காய் பழம் வைத்து பூஜை செய்தும் அஞ்சலி செலுத்தினர்.மேலும் குடிநீர் குழாயை சுற்றி ஓப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி,உள்ளிட்ட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க