July 14, 2018
தண்டோரா குழு
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் நாளை(ஜூலை 15)கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
2006-ம் ஆண்டு முதல் காமராஜர் பிறந்தநாள்,கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் நாளை விடுமுறை நாள் என்றாலும்கூட,காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும்,அனைத்து பள்ளிகளிலும் காமராஜரின் வரலாறு,அவரது திட்டங்கள்,சாதனைகள்,கல்விக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.