• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்றாம் இடத்திற்கான பிளே ஆப் போட்டியில் இங்கிலாந்து,பெல்ஜியம் அணிகள் மோதல்

July 14, 2018 தண்டோரா குழு

FIFA உலகக்கோப்பையின் மூன்றாம் இடத்திற்கான பிளே ஆப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன.

FIFA உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான பிளே ஆப் போட்டி இன்று நடைப்பெறுகிறது.32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பையில்,காலிறுதி சுற்றுகள் முடிந்து பிரான்ஸ்,பெல்ஜியம்,இங்கிலாந்து, குரோஷியா உள்ளிட்ட நான்கு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இதில்,பிரான்ஸ் அணி பெல்ஜியத்தையும்,குரேஷியா அணி இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.இந்நிலையில்,அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிய இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் இன்று நடக்கும் பிளே ஆப் போட்டியில் மூன்றாம் இடத்திற்காக போட்டியிட உள்ளன.

மேலும்,இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 3வது இடமும்,சுமார் 24 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க