July 13, 2018
தண்டோரா குழு
கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கமளித்துள்ளது.
கோவை அடுத்த நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிபிஏ படித்து வருபவர் லோகேஸ்வரி.இவர் வியாழனன்று கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது பயிற்சியாளர் ஆறுமுகம் மாணவியை 2வது மாடியில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.இதில் சன்சைடில் மோதி லோகேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து,உடனே அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில்,கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை,பயிற்சியின் போது மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. மாணவியின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.அங்கு பயிற்சி அளித்தவர் எங்களிடம் முறையாக பயிற்சி பெற்றவர் இல்லை எனக் கூறியுள்ளது.