July 13, 2018
தண்டோரா குழு
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஒரு போலி பகுத்தறிவுவாதி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஒரு போலி பகுத்தறிவுவாதி.தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் கமல்ஹாசன் அமாவாசை தினத்தில் கட்சி துவங்கி கொடியேற்றம் செய்து ஏன் வேஷம் போட வேண்டும்.மேலும்,பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா வருகை தமிழக பாஜக தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.வாக்குச்சாவடிக்கு ஒரு பாஜக பிரதிநிதி என்ற நோக்கி தமிழகத்தில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.தமிழகத்தில் எதிர்வரும் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் முடிவு பாஜக யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை கூட்டணிக்கு வரமாட்டோம் என சொல்வது வேடிக்கையாக உள்ளது”.இவ்வாறு அவர் பேசினார்.