July 13, 2018
தண்டோரா குழு
கல்லூரி மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
கோவை அடுத்த நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது இரண்டாவது மாடியில் இருந்து பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் கல்லூரி மாணவி தலையில் அடிபட்டு பலியானார்.இதையடுத்து,மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்,
“பொதுவாக பள்ளி,கல்லூரிகளில் பேரிடர் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.உரிய பாதுகாப்புடன் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும்.மாணவி உயிரிழந்த சம்பவம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய செயல்.இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.விசாரணை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியானது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.