July 13, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்துள்ளார்.
கோவை அடுத்த நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிபிஏ படித்து வருபவர் லோகேஸ்வரி.இவர் வியாழனன்று கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது பயிற்சியாளர் ஆறுமுகம் மாணவியை 2வது மாடியில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.இதில் சன்சைடில் மோதி லோகேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து,உடனே அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து,இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.