July 12, 2018
தண்டோரா குழு
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அம்மன் சன்னதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதியளித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து கோயிலின் உள்ளே இருந்த கடைகள் அகற்றப்பட்டன.இந்நிலையில் கடைகளை திறக்க அனுமதி கோரி கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம்,மீனாட்சி அம்மன் கோவில் சன்னிதி அருகே உள்ள 51 கடைகளை மட்டும் திறந்து கொள்ள இன்று அனுமதி வழங்கியுள்ளது.மேலும்,டிசம்பர் 31-ம் தேதி வரை கடை வைத்திருப்போம் என உறுதிமொழி பத்திரம் கடை உரிமையாளர்கள் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.