July 12, 2018
தண்டோரா குழு
கால்நடை மருத்துவக் கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி தொடங்கும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஜூலை 24 ஆம் தேதி தொடங்கும் கலந்தாய்வின் முதல் நாளில்,தொழிற்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவுக்கும்,ஜூலை 25 ஆம் தேதி பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் கலையியல் பிரிவுக்கும்,ஜூலை 26 ஆம் தேதி பிடெக் உணவுத் தொழில்நுட்பம்,கோழி மற்றும் பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12,000 பேர் விண்ணப்பித்த இந்த கலந்தாய்வுக்கான,தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வுக்கான அழைப்பை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையத்தில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.