July 12, 2018
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்,பாரதி பூங்காவில் சூன்யா திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை சிறப்பாக செய்த பொதுமக்கள்,மாநகராட்சி பணியாளர்கள்,பணியாளர்கள்,தன்னார்வ அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அம்மன்.கே.அர்ச்சுணன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மக்கும் குப்பை,மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை சிறப்பாக செய்த 30 பொதுமக்கள்,மாநகராட்சி பணியாளர்கள் 12 பேருக்கும்,9 தன்னார்வ அமைப்புகளுக்கும்,பாராட்டு சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.
இவ்விழாவில் கலந்துக் கொண்ட கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்,
“கோவை மாநகராட்சி தூய்மைப் பணியில் முன்னிலை மாநகரமாக விளங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் சிறப்பாக செய்படுத்தப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சியுடன் சூன்யா திட்டத்தின் கீழ் வார்டு எண்-22,24 வார்டுகளில் மாநகராட்சி அதிகாரிகள்,ICCEI
அலுவலர்கள்,RAAC,BOSCH,BPLA மற்றும் JNLA ஆகியோர்கள் இணைந்து தூய்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.
தூய்மைப் பணியில் பொதுமக்கள் பங்களிப்பு என்பது அவசியமான ஒன்றாகும்.அதற்கேற்ப கோவை மாநகராட்சியில் இப்பகுதியில் மக்கும் குப்பை,மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை பொதுமக்களும்,மாநகராட்சி பணியாளர்களும்,தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்களும் சிறப்பாக மேற்கொண்டுவருவது பாராட்டுக்குரியதாகும்.மேலும்,இதுபோன்ற பணிகளை தொடர்ந்து அனைவரும் மேற்கொள்ள வேண்டும் அதற்காக மாநகராட்சி என்றும் துணையாக இருக்கும்”என்றுக் கூறினார்.