July 11, 2018 
தண்டோரா குழு
                                சிம்புவின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்கூறியுள்ளார். 
சினிமா தொடர்பாக ராமதாஸ் அங்கிளுடன் விவாத்த நடத்த தயாரா இருக்கிறேன் என நடிகர் சிம்பு நேற்று வீடியோ வெளியிட்டார்.இதற்கிடையில் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக ஆஜராவதில் இருந்து அன்புமணிக்கு விலக்கு அளித்த உயர் நீதிமன்றம்,5 ஆயிரம் ரூபாய்க்கான பிணையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.இதற்காக,அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“சர்கார் பட விவகாரத்தில் விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடல் நடலத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் கூறினேன்.சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.இதுதொடர்பான கூட்டத்தை நடிகர் சங்கம் கூட்டினால் அங்கு விவாதிக்க தயாராக இருப்பதாக இருக்கிறேன்” எனக் கூறினார்.