July 11, 2018
தண்டோரா குழு
கோவையில் விமான பயணிகளிடம் கனிவாக நடந்துக்கொள்வது தொடர்பாக காவல்துறையினர், விமான நிலைய அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கால் டேக்சி ஓட்டுனர்களுக்கு அறிவுறைகள் வழங்கப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விமான நிலைய துணை பொதுமேலாளர் ராமகிருஷ்ணன் சிங்,லக்ஷ்மணன் மற்றும் காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.கடந்த சில நாட்களாக விமான பயணிகளிடம் கடுமையாக கால்டேக்சி ஓட்டுனர்கள் நடந்துக்கொள்வதாக எழுந்த புகாரையடுத்து,இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
கால் டேக்சி,ஓலா,ரெட் டேக்சி,ஊபர் போன்ற தனியார் கால் டேக்சி ஓட்டுனர்கள் என சுமார் 100 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.விமான நிலையத்திற்கு பெரும்பாலும் மற்ற மாநிலங்கள்,மற்ற நாட்டவர்கள் மொழி தெரியாமல் சிரமப்படும் நிலையில்,கால் டேக்சி ஓட்டுனர்கள் விமான பயணிகளுக்கு வழிகாட்டியாகவும்,அவர்களின் நண்பனாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறைகள் வழங்கப்பட்டது.
மேலும்,விமான பயணிகளின் உடைமைகள் காணாமல்போகும் பட்சத்தில் உரிய முறையில் பயணிகளை வழி நடத்த வேண்டும்,உடனே விமான நிலைய காவல்துறையினருக்கும்,பீளமேடு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.