• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரமெடுக்கும் டி.ராஜேந்தர்

July 10, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வீராசாமி’.
தற்போது, 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டி.ராஜேந்தர் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்திற்கு ‘இன்றையக் காதல் டா’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை டி.ராஜேந்தரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற காதல் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு டி.ராஜேந்தரே பாடல்கள் எழுதுவதோடு, இசையமைக்கவும் உள்ளார்.

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற காதல் கதை கொண்ட இப்படத்தில் பிக் பாஸ் புகழ் நமீதா லேடிடான் வேடத்தில் நடிகவுள்ளராம். மேலும், முக்கிய வேடங்களில் ராதாரவி, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

மேலும் படிக்க