• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் சிம்பு

July 9, 2018 தண்டோரா குழு

திருமணத்திற்கு பின் தமிழில் ரீ- என்ட்ரி கொடுத்த ஜோதிகா அடுத்தது வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.பாலாவின் ‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா கைவசம் மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்’ மற்றும் ராதாமோகனின் ‘காற்றின் மொழி’ ஆகிய 2 படங்கள் உள்ளது.

‘காற்றின் மொழி’ படம்,‘துமாரி சுலு’ எனும் ஹிந்தி படத்தின் ரீமேக்காகும்.இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ்&டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார்.சமீபத்தில், துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிம்பு ஏற்கெனவே,ஜோதிகாவுடன் ‘மன்மதன், சரவணா’ ஆகிய 2 படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க