• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிர்பயா பாலியல் கொலை வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

July 9, 2018 தண்டோரா குழு

நிர்பயா பாலியல் கொலை வழக்கில் 4 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.படுகாயம் அடைந்த அந்தப்பெண் 13 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார்.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் ஒருவன்,சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான்.முக்கிய குற்றவாளி ராம்சிங்,திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.முகேஷ்,பவன்குமார்,வினய்,அக்ஷய் ஆகியோருக்கு டில்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இந்நிலையில் முகேஷ்,பவன்,வினய் ஆகியோர் மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இம்மனுக்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது,மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்க கூடிய முகாந்திரம் ஏதுமில்லை என்று மனுவை தள்ளுபடிய செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து நிர்பயாவின் தாய் ஆஷாதேவி கூறும்போது,

தற்போது நீதி கிடைத்துள்ளது.எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை.குற்றவாளிகளை தூக்கில் போடும் இறுதி நாள் வரை போராடுவோம் என கூறினார்.

மேலும் படிக்க