July 5, 2018
தண்டோரா குழு
என் பக்கம் உண்மையான திமுக தொண்டர்கள்,அங்கு கட்சிக்கு உழைக்காதவர்களும் செயல்படாத செயல்தலைவரும் தான் உள்ளனர் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கபட்ட மு.க.அழகிரி ஒதுங்கியே இருந்து வருகிறார்.ஆனாலும்,அவ்வபோது திமுக தலைவர் கருணாநிதியையும் தயாளு அம்மாளையும் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் பாலமேடு அருகே தன் ஆதரவாளர் மதுரை வீரன் இல்லத் திருமண விழாவில் அழகிரி கலந்துகொண்டார்.
அப்போது விழாவில் பேசிய மு.க அழகரி,
“திருமண விழாவுக்கு வருகிறேனா அல்லது கட்சி மாநாட்டுக்கு வருகிறேனா என்று தெரியாத அளவுக்கு நான் இங்கு வருவதற்காக வரவேற்பு,பேனர்கள்,மாலை மரியாதைகள் செய்யும் போது பழைய நினைவெல்லாம் வருகிறது.இவற்றை எல்லாம் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.திமுகவில் இப்போது இருப்பவர்கள் பதவிக்காகவே உள்ளனர்.அவர்கள் கட்சிக்காக உழைக்காதவர்கள்.ஆனால் திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர். செயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார்.ஆனால்,செயல்படுகிற வீரர்கள் இங்குதான் உள்ளனர் எனக் கூறியுள்ளார்”.