July 5, 2018
கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெர்வித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்ற பின் முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.அதில் கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.மேலும்,ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும்,ரூ.25,000 வரை விவசாய கடன் செலுத்தி இருந்தால் திருப்பி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.