• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியையின் தலையை வெட்டி 5 கி.மீ. தூரம் எடுத்துச் சென்ற நபர்

July 4, 2018 தண்டோரா குழு

ஜார்க்கண்டில் ஆசிரியர் தலைமை வெட்டி எடுத்துக் கொண்டு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் செராய்கெலா மாவட்டத்தில் வசித்து வருபவர் சுக்ரா ஹெசா. 30 வயதனா இவர் கபரசாய் துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளியில் குழந்தைகள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஆசிரியை இதனை கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தை நோக்கி ஹெம்பிராம்(26) என்பவர் வேகமாக ஓடி வந்தார். அவர் திடீரென ஆசிரியையின் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்றுள்ளார். தனது வீட்டிற்கு அருகில் சென்ற பிறகு தான் வைத்திருந்த அரிவாளால் ஆசிரியையின் தலையை துண்டித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

சிலர் தூரத்தில் இருந்து அவர் மீது கற்களை எரிந்தனர். இதனால், அச்சமடைந்த அந்த நபர் உடனே ஆசிரியையின் துண்டிக்கப்பட்ட தலையை மட்டும் எடுத்துக்கொண்டு ஹிசெல் கிராமம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் ஓடியுள்ளார். இதன்பின் துண்டிக்கப்பட்ட தலையை சுமார் 5 கிலோமீட்டர் எடுத்துச் சென்றார். இதனால் பதறிப்போன பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபரை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஹரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க