• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாயிகள் வஞ்சிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் – முரளிதரராவ்

July 4, 2018 தண்டோரா குழு

மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்த மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும். விவசாயிகள் பாதிக்காத வகையில் செயல்படுத்த மாநில அரசு முன் வர வேண்டுமென பாஜக வின் தேசிய தலைவர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“கடந்த நான்கு ஆண்டில் மோடி தலைமையிலான அரசு,பல்வேறு மேம்பாடு மற்றும் நலதிட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.தென் மாநிலங்களில் பா.ஜ.க வளர்ந்து வரும் நிலையில்,காங்கிரஸ் தென் இந்தியாவில் இருந்து மறைந்து வருவதாக விமர்சனம் செய்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் பா.ஜ.கவிற்கு முக்கியமானது,அதுவும் தமிழகம் இந்தியாவில் மிகப்பெரிய மாநிலம்,அரசியலில் மிகவும் முக்கியமானது,எனவே பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற,வீயூகம் வகுக்க தேசிய தலைவர் அமித்ஷா வருகின்ற 9ம் தேதி சென்னையில் பா.ஜ.க தலைவர்களை சந்திக்க உள்ளார். இதனையடுத்து 55,000 வாக்கு மையங்களில் இருந்து 5 வாக்கு மையத்திற்கு ஒருவர் வீதம் 11 ஆயிரம் பா.ஜ.க பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழகத்தில் வெற்றி பெற கருத்துக்களை கேட்க உள்ளதாக தெரிவித்தார்.

தமிழுக்கு மத்திய அரசு முன் உரிமை கொடுத்து வருவதாகவும்,தமிழின் பெருமையை அடையாளப்படுத்தி,அதற்கு முக்கியதுவம் அளித்து வருவதாக தெரிவித்தார்.மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது.

கோவையில் 55,000 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஜி எஸ் டி வரி விதிப்பால் மூடப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு,ஜி.எஸ்.டி வரி விதிப்பு அனைத்து தொழிற்துறையினருக்கும் வளைந்து கொடுக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,மாநில அரசுகள் ஜி.எஸ்.டி யால் பாதிக்கப்படும் தொழிற்சாலைகள் குறித்து கவுன்சிலிடம் தெரிவித்தால்,அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க பரிசீலிக்கப்படும் எனக்கூறினார்.

டெல்லி மாநிலத்தின் ஆலோசனையின் படி தான் ஆளுநர் நடக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து தனக்கு தெரியாது எனவும்,முழுவதும் தெரிந்த பின்பு பதிலளிப்பதாக தெரிவித்தார்.

மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பு இருந்தால் தான் செய்ய முடியும்.சேலம் எட்டு வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும்,என்பதற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கத்தான செய்யும்.அதற்காக விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது.விவசாயிகள் வஞ்சிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்றார்.

தேர்தலில் கூட்டணி வைத்து கொள்வதற்கு பா.ஜ.க திறந்த மனதுடன் இருக்கிறது.தமிழகத்தில் புதிய அரசியல் சூழல் நிலவுவதால்,பா.ஜ.க வளர்ச்சி அடைய இதுதான் சரியான தருணம் என தெரிவித்தார்”.

மேலும் படிக்க