• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பால் தமிழகத்தில் சில மாற்றங்கள் வரலாம் – திருநாவுக்கரசர்

July 4, 2018 தண்டோரா குழு

18 எம்.எல்.ஏக்கள் சம்பந்தமாக வர உள்ள தீர்ப்பால் தமிழகத்தில் சில மாற்றங்கள் வரலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“18 சட்டமன்ற உறுப்பினர்களின் விசாரணை தொடங்குவது வரவேற்கதக்கது.40 லட்சம் வாக்காளர்கள் எம்.எல்.ஏ க்கள் இல்லாமல் உள்ளனர்.இது அந்த பகுதி மக்களின் வளர்ச்சியை பாதிக்கும்.தீர்ப்பு விரைவில் வரும்.அதற்கான முடிவுகளை நீதிமன்றம் எடுத்து உள்ளது என்று கருதுகிறேன்.வர உள்ள தீர்ப்பால் தமிழகத்தில் சில மாற்றங்கள் வரலாம்.

சபாநாயகர் முடிவு ஏற்று கொள்ள விட்டால் நாடாளுமன்ற தேர்தல் உடன் சட்டமன்ற தேர்தலும் வரலாம்.1 ஆண்டிற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.உள்ளாட்சித் துறையில் நேரடியாக நிதி ஒதுக்கி வருகிறார்கள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் நிதி ஒதுக்குவது நல்லதல்ல.

சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் இணைந்து நடத்த மத்திய அரசு முடிவு செய்து வருவது சரியல்ல. அவசரபட்டோ தனித்து முடிவு செய்யக்கூடாது அனைத்து கட்சியிடமும் பேசி முடிவு செய்யவேண்டும். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு கொன்று விட்டு ஆலையை மூடியதற்கு பதிலாக முன்பே மூடி இருக்கலாம்.அதே போல தான் 8 வழி சாலையும்ம் எந்த திட்டமாக இருந்தாலும்.

தற்போது நடப்பது ஒரே வரி அல்ல பல்வேறு நிலைகளில் வரி விதிக்கப்படுகிறது.உலகத்திலேயே இந்தியாவில் தான் 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது.வரி இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்பது உண்மைதான் ஆனால் அது விதிக்கபட வேண்டிய முறை உள்ளது.

நடுத்தர ஏழை மக்கள் உபயோகப்படுத்தும் பொருள்களுக்கு வரியை குறைக்க வேண்டும்.வரி விதிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.மக்களும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காவல்துறை என்கவுண்டர் செய்வது சரி அல்ல கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

மத்திய அரசு வட மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட தமிழர்களை பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்க வேண்டும் முதலில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அமைத்து கொடுக்க வேண்டும்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க