• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சியில் ஆளும் அதிமுக அரசு செயல்படுகிறது – மக்கள் பாதுகாப்பு கட்சி

July 4, 2018 தண்டோரா குழு

கோவையில் மக்கள் பாதுகாப்பு கட்சியின் தலைவர் DR.காமராஜ்,மற்றும் நிறுவனர் C. நடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்,

“கோவை மாவட்டத்தில் உள்ள மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி தண்ணீரை விநியோகிக்கும் உரிமையை வெளிநாட்டில் உள்ள சூயஸ் நிறுவனத்திடம் 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பதிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இந்த ஒப்பந்தத்தை அரசும்,மாநகராட்சியும்,மக்களின் கருத்தை கேட்டு,அதன்பின் செயல்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் அரசே 24 மணிநேரமும் குடிநீர் வழங்க முன் வரவேண்டும், என்றும் தெரிவித்தார்.

இதனிடையே சேலம் மாவட்டத்தில் அமையவுள்ள 8 வழி சாலை,விவசாய நிலங்களை அழித்து போடப்படும் சாலையாக இருக்கிறது.இது விவசாயிகளையும்,விவசாயத்தையும் முற்றிலும் அழிக்கும் முயற்சியில் ஆளும் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.தமிழகம் வரும் காலங்களில் அனைத்து வளங்களையும் இழந்து பாலைவனமாக மாறக்கூடிய நிலை உருவாகும்.இன்னும் சொல்லபோனால் இந்த சாலை போடப்படுவது மக்களின் வரிபணத்தில், அந்த வரிபணம் விவசாயத்தை அழிக்க தவறான வழியில் பயன்படுத்துகிறது இந்த அரசு.தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமுல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக இன்று படிப்படியாக டாஸ்மாக் கடைகடைகளை திறந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க