July 3, 2018
தண்டோரா குழு
கோவை என்.ஜி.ஓ காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள ரயில்வே மேம்பால பணிக்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறை அலுவலரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மேட்டுபாளையம் சாலை என்.ஜி.ஓ காலனி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அப்பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.அங்கு மேம்பாலம் கட்ட 60 வீட்டு உரிமையாளர்களிடம் நிலம் கையகபடுத்த வருவாய்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பட்டது.
இந்நிலையில் அவர்களிடம் கருத்து கேட்க வருவாய்துறை அதிகாரி துறை ரவிசந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது அங்கு வந்த குடியிருப்பு வாசிகள் நிலம் கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.சாலை 60 அடி உள்ளதால் நிலம் ஏன் கையகப்படுத்த வேண்டும்,கூடுதலாக இடம் தேவைப்பட்டால் வீட்டிற்கு அருகே மேலே பாலம் செல்ல கூட அனுமதியளிக்க தயாராக உள்ளோம் ஆனால் நிலத்தை கொடுக்க மாட்டோம்.
மேலும்,அதிகளவு போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் பாலம் கட்டாமல் தற்போது ஏன் அவசர கதியாக பாலம் கட்ட முயற்சிக்கின்றனர் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.எனவே,நிலம்
கையகப்படுத்தும் முடிவை அரசு திரும்ப பெற வேண்டும் என வருவாய்துறை அதிகாரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.