July 3, 2018
தண்டோரா குழு
முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 76 பந்துகளில் 172 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா அணிகள் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன.இந்நிலையில் இன்று ஜிம்பாப்வே,ஆஸ்திரேலியா அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபிஞ்சும்,டி ஆர்கி ஷார்ட்டும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்தனர்.அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்,வெறும் 76 பந்துகளில் 172 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார்.இறுதியில் ஆஸ்திரேலிய அணி 2
விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது.
கடந்த 2013ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 156 ரன்கள் எடுத்து டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.