July 3, 2018
தண்டோரா குழு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் படுக்கை வசதிகளுடன் கூடிய குளிர்சாதன வசதி மற்றும் ஜிபிஎஸ் வசதிகளை கொண்ட 515 பேருந்துகள் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் துணை முதலமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.