July 3, 2018
தண்டோரா குழு
கிரிக்கெட் வீரர் ஹர்பஜனின் பிறந்த நாளையொட்டி அவரை போலவே தமிழில் சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங்.இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
ஹர்பஜன் சிங் ஏலம் எடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தமிழில் டுவீட் செய்து அசத்தினார்.அதன் பின் ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கு பின்னும் தமிழில் டுவீட் செய்து அசத்தி வந்தார்.இதனால் ஹர்பஜனின் தமிழில் டுவீட்டுக்கே தனி ரசிகர்கள் இருந்தார்கள் என்றே சொல்லலாம்.இதற்கிடையில் இன்று ஹர்பஜன் சிங் பிறந்த நாள் என்பதால் அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஹர்பஜனின் பிறந்த நாளையொட்டி அவரை போலவே தமிழில் வாழ்த்து சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்” எனக் கூறியுள்ளார்.