July 3, 2018
தண்டோரா குழு
ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
3 மாதங்கள் தொடர்ந்து ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவிப்பை தமிழக அரசு பின்பற்ற கூடாது என திமுக எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன் பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினா் சுப்பிரமணியன் இது தொடா்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினாா்.அதற்கு பதில் அளித்த தமிழக உணவுத்துறை அமைச்சா் காமராஜ்,தொடா்ந்து 3 மாதங்கள் பொருள்கள் வாங்கவில்லை என்றாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது.மத்திய அமைச்சா் கூறியது அறிவுரை தான் என்றும்,கொள்கை முடிவு இல்லை என்றும் அமைச்சா் விளக்கம் அளித்துள்ளாா்.