July 2, 2018
தண்டோரா குழு
தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழகம்,கர்நாடகம்,கேரளம்,புதுச்சேரி அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.காலை 11 மணியளவில் தொடங்கப்பட்ட மேலாண்மை ஆணைய கூட்டம் சுமாா் 4 மணி நேரம் நீடித்ததது.அதில்
கா்நாடகா அரசு ஜூலை மாதத்தில் 30 டி.எம்.சி. நீரை வழங்கியாக வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2ஆவது கூட்டம் இந்த மாதத்தில் (ஜூலை) நடைபெறும் என்றும்,அந்த கூட்டத்தின் போது ஆகஸ்ட் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீாின் அளவு உறுதி செய்யப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.