• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜாமினில் வெளிவந்த ரவுடி பினு தலைமறைவு

July 2, 2018 தண்டோரா குழு

சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த ரவுடி பினு தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு அருகே வடக்குமலையம் பாக்கத்தில் பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்த,75 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரவுடி பினு என்கவுன்டருக்கு பயந்து கடந்த பிப்ரவரி 13ம் தேதி சென்னை அம்பத்தூர் போலீசில் சரணடைந்தார்.

இதையடுத்து,புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பினு,அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பிற ரவுடிகளால் ஆபத்து நேரிடும் என கருதி வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.இதற்கிடையில்,பினுவுக்கு கடந்த 23 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து,சிறையில் இருந்து பினு வெளியே வந்தார்.

இதையடுத்து,சிறையில் இருந்து வெளிவந்த பினு இன்று வரை மாங்காடு காவல்நிலையத்துக்கு கையெழுத்து போட வரவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து,ரவுடி பினு தலைமறைவு ஆகியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரவுடி பினு நிபந்தனை ஜாமின் படி செயல்படாமல் தப்பியோடியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க