• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக சார்பில் வரும் ஜூலை 6ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

June 30, 2018 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியின் குடிநீர் பராமரிப்பு பணியை பிரான்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து திமுக சார்பில் வரும் ஜூலை 6ம் தேதி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோவையில் கருணாநிதியின் 95 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ கார்த்திக் கூறுகையில்,

கோவை மாநகராட்சி பகுதியில் 24 மணிநேரமும் குடிநீர் வழங்க 2008ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது,மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான திட்ட வரையறைகள் தயார் செய்யப்பட்டது.இதற்கான மத்திய – மாநில அரசுகளிடம் நிதி பெற 2011 ஜனவரி மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பிறகு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 8 வருட கால தாமதத்திற்கு பிறகு,24 மணிநேர குடிநீர் வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,குடிநீர் வழங்குவதற்காக பிரான்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு பராமரிப்பு பணிகளை கொடுத்துள்ளனர்.இதன் மூலம்,ஒரு வருடம் அவர்கள் திட்டமிடவும்,4 ஆண்டுகள் அதற்கான பணிகளை மேற்கொள்ளவும்,21 ஆண்டுகள் பராமரிப்பிற்காகவும்,மொத்தம் 26 ஆண்டுகள் பணிக்காக 3150 கோடியை வழங்கியுள்ளனர்.இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு திமுக செயல்தலைவரும்,எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநகராட்சியையும்,அரசையும் கண்டித்து கண்டன அறிக்கை வெளிட்டுள்ளார்.இதுதொடர்பாக சட்டமன்றத்தில் திமுக செயல் தலைவரின் ஆலோசனையின் பேரில்,சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததாக தெரிவித்தவர்,இது தொடர்பான கேள்விகளுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்கவில்லை.

ஒரு திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றால்,அதன் மதிப்பிற்கு தகுந்தவாறு விவாதித்து அனுமதி பெற வேண்டும் என்பது மரபு.இதற்கிடையே மாநகராட்சியினுள் சிங்காநல்லூர்,கோவை வடக்கு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகளும்,கவுண்டம்பாளையம் தொகுதியில் ஒரு சில பகுதிகளும் உள்ளடங்கியுள்ளது.இப்படி இருக்க சட்டமன்ற உறுப்பினர்களிடத்தில் கூட அனுமதி பெறவில்லை.

மேலும்,தனியாருக்கு வழங்கிய மாநகராட்சி நிர்வாகம்,உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 6ம் தேதி,கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க